விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்: ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் கோரிக்கை

சென்னை: விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால்அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு மேல் கூடுதலாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் 10 மாதம் முதல் 15 மாதம் வரை கூடுதலாக பணி செய்வார்கள். இதனால் அரசு நல திட்டங்கள் மிக விரைவில் மக்களுக்கு சென்று அடையும், அரசின் நிதி சுமையும் குறையும்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை