தமிழ்நாட்டுக்கு பணிக்கு வரும் வடமாநிலத்தவரை கண்காணிக்க உள்நுழைவு அனுமதிச் சீட்டு: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று, மது போதையில் ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற தமிழக காவலர்களை வட மாநிலத்தவர்கள் கட்டையாலும், கற்களாலும் கடுமையாக தாக்கினர். ஒன்றிய பாஜ அரசு கொடுத்த தைரியத்தின் காரணமாக தான், கோவை, திருப்பூரில் இந்தியில் பிரசாரம், திருப்பூரில் கலவரம் ஆகிய குற்ற நிகழ்வுகள் அரங்கேறியது. எனவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உள்aநுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில்தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

வாழவைக்கும் வாணியம்பாடி தென்னை!

பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி