குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் ‘நல் ஆளுமை’ குறித்த பயிலரங்கம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ‘நல் ஆளுமை’ முயற்சிகளை செயல்படுத்துவதற்கான கண்காணிப்பை மேம்படுத்துதல் கிராம ஊராட்சி அளவில் நல் ஆளுமை முயற்சிகளை சமூகமாக செயல்படுத்துதல் குறித்து பயிலரங்கம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், பொறியாளர் மேலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சி வகுப்பில் 100 நாள் வேலை திட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள நடைமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் எவ்வித அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளுவது என்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், மண்டல துணை வட்டாட்சியர் அலுவலர்கள் அனைத்து பணி மேற்பார்வையாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து