மதுரவாயல்- துறைமுகம் சாலையின் மேம்பட்ட பாலங்களுக்கான பணிகளை ஒன்றியஅரசு விரைவில் நிறைவு செய்யும்: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்


சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் (ெகாமதேக) பேசுகையில், ‘‘சென்னையில் மெட்ரோ ரயில் நிலையம் கலர் கலராக அதன் விளம்பரத்திற்கு தகுந்தாற்போல உள்ளது. உலகில் எந்த நாட்டிலுமே இவ்வாறு கிடையாது. ஒரே கலரில்தான் இருக்கும். பார்த்தாலே இது மெட்ரோ ரயில் நிலையம் என்று தெரியும். மதுரவாயல்-துறைமுகம் சாலை என்பது போக்குவரத்து நெரிசலுக்கான சாலை அல்ல, அது பொருளாதார மேம்பாட்டுக்கான சாலை. இரண்டடுக்காக வரும் என்று சொல்லியிருந்தோம். ஆனால் இன்னமும் தூண்கள்தான் நின்றிருக்கின்றன” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘ஏற்கனவே ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, பலமுறை வலியுறுத்தியதன் அடிப்படையில், சுமார் ₹5,700 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, பணிகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி, ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும் என்று கேட்டது. அதற்கு, ஜிஎஸ்டி வரியை மாநில அரசு தவிர்க்க முடியாது. ஏனெனில், ஜிஎஸ்டியை வசூலிப்பது ஒன்றிய அரசுதான். அதை ஒன்றிய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசைப் பொறுத்த அளவில் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அவையனைத்தையும் செய்கிறோம் என்று கூறியதற்கு, ஒன்றிரண்டு கேட்டகிரிஸ் கேட்டிருந்தார்கள்.

அவற்றிற்கான ஒப்பந்தம் போடும் அடிப்படையில், ஒன்றிய அரசின் நிதின் கட்கரிக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் சிங், தலைமைச் செயலக கோட்டைக்கு வந்து, முதல்வர் முன்னிலையில் ஒன்றிய அரசாங்கம் உயர்மட்ட பாலங்கள் அமைக்க, மாநில அரசு என்னென்ன உதவிகள் செய்ய முடியும் என்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை போட்டு, தற்போது அப் பணிகள் ஆரம்ப நிலையில் இருக்கிறது. விரைவில் மாநில அரசின் ஒத்துழைப்போடு ஒன்றிய அரசு மேம்பட்ட பாலங்களுக்கான பணிகளை நிறைவு செய்யும்” என்று பதில் அளித்தார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது