பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீஸார் வழக்குப்பதிவு

மதுரை: மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த 1ம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின் தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

போலீசாருடன் வந்த தமிழ்நாடு ஊழல் தடுப்பு அதிகாரிகளை உள்ளே விட அமலாக்கத்துறையினர் மறுத்தனர். பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ED அதிகாரி அங்கித் திவாரி டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு