வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி

 

மணப்பாறை, ஜூலை 25: வேலை வாங்கிதருவதாக கூறி பண மோசடி செய்த திருச்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாதா கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஆண்டனி (29) . இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்தார். அப்போது அவரது குடும்ப நண்பர் மூலம் மணப்பாறையை சேர்ந்த கார்த்திகேயன் (45) மற்றும் திருச்சி உறையூரைச் சேர்ந்த ஜெய் வெங்கடேஷ் (54) ஆகியோர் அறிமுகமாயினர். அவர்கள் எங்களுக்கு அதிமுக அமைச்சரை தெரியும் பணம் கொடுத்தால் உதவி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதை நம்பிய ராஜேஷ் ஆண்டனி கடந்த 2020ம் ஆண்டு ரூ.5 லட்சத்தை கார்த்திகேயனிடம் கொடுத்தார்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் வேலை வாங்கித் தர இயலாது எனக் கூறி பணத்தை திருப்பி தருவதாக கார்த்திகேயனும், ஜெய் வெங்கடேஷூம் க ஒரு லட்சம் மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள நான்கு லட்சத்திற்கு கார்த்திகேயன் காசோலை கொடுத்தார் . காசோலையை ராஜேஷ் ஆண்டனி வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து ராஜேஷ் ஆண்டனி கொடுத்த புகாரின் அடிப்படையில் கார்த்திகேயன் மற்றும் ஜெய் வெங்கடேசை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது கார்த்திகேயன் முன்ஜாமின் பெற்றிருந்தார். இதையடுத்து ஜெய்வெங்கடேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை