மகளிர் உலக கோப்பை கால்பந்து; நியூசி, ஆஸி வெற்றி

ஆக்லாந்து/சிட்னி: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன. பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து, ஆக்லாந்து நகரில் தொடக்கவிழா நேற்று மாலை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. பின்னர் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆக்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதியில் 2 அணிகளும் கோலடிக்கவில்லை. ஆனால் 2வது பாதியில் நியூசியின் முன்கள வீராங்கனை ஜே.ஹாண்ட் தட்டி தந்த பந்தை மற்றொரு முன்கள வீராங்கனை ஹன்னா வில்கின்சன் அற்புதமான கோலாக மாற்றினார்.

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் அடித்த கோலால் பெற்ற முன்னிலை தொடர, நியூசி கடைசியில் 1-0 என்ற கோல் கணக்கில் உலக கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து சிட்னியில் நடந்த 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து அணிகள் விளையாடின. அதில் ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஆஸி வீராங்கனை ஸ்டெப் கேத்தி அழகான கோலக்கினார். ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும் ஆஸியால் கோல் எண்ணக்கையை அதிகரிக்க முடியவில்லை. அதனால் மகளிர் உலக கோப்பை வரலாற்றில் முதல் கோல் அடித்த ஆஸி, 1-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியையும் பெற்றது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை