மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

சென்னை: இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை கொண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். தன்னார்வலர்கள் இல்லாத ரேஷன் கடை பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் போது 2 கிலோமீட்டர் தூரத்துக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு