மகளிர் உலக கோப்பை கால்பந்து ஜாம்பியாவை பந்தாடியது ஸ்பெயின்

டுனெடின்: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், ஜாம்பியாவுடன் மோதிய ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.
ஆஸ்திரலேியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து 9வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை நடத்தி வருகின்றன. நியூசி.யின் டுனெடின் நகரில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் – ஜாம்பியா அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்திய ஸ்பெயின் அணி, 9வது நிமிடத்தில் தெரசா அபெல்லைரா, 13வது நிமிடத்தில் ஜெனிபர் ஹெர்மோசோ கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது.

2வது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு அல்பா ரெடாண்டோ (69’), ஜெனிபர் ஹெர்மோசோ (70’), 85வது நிமிடத்தில் அல்பா கோல் போட்டு அசத்தினர். ஜாம்பியா வீராங்கனைகள் கடுமையாகப் போராடியும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் 2-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது. பி பிரிவில் அயர்லாந்துடன் மோதிய கனடா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

Related posts

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா