ஐசிசி மகளிர் டி20 போட்டியில் பேட்டிங்கிற்கான தரவரிசை பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

துபாய்: ஐசிசி மகளிர் டி20 போட்டியில் பேட்டிங்கிற்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4வது இடத்திற்கு முன்னேறினார். மகளிர் டி20 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரு அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேற்றமடைந்துள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 60 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 1 புள்ளி பெற்று 743 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறினார். இதே போன்று இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து, ஆசியக் கோப்பை தொடரில் 304 ரன்களை குவித்ததன் மூலம் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 3 புள்ளிகள் பெற்று 705 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறினார்.

769 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்தில் நீடித்து வருகிறார். மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனையான தஹ்லியா மெக்ராத் 762 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 746 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய வீராங்கனைகளான தீப்தி ஷ்ரமா 755 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், 722 புள்ளிகளுடன் ரேணுகா சிங் 5 வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி ஷ்ரமா 396 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி