சர்வதேச மகளிர் தினம்: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து


டெல்லி: மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு தலைவர்; அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள். ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் விளையாட்டு முதல் அறிவியல் வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இளம் பெண்களின் பாதையில் எஞ்சியிருக்கும் தடைகளை நீக்கி, அவர்களுக்கு சிறகுகளை வழங்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம், ஏனென்றால் அவர்கள் நாளைய இந்தியாவை வடிவமைப்பார்கள்.

அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்துவரும் பெண்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பாடுபட்டு வரும் பெண்களுக்கு இந்த நாளை சமர்ப்பிப்போம். பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்; சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம். கல்வி, தொழில்முனைவு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பலவற்றில் முன்முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாம் செய்த சாதனைகளிலும் இது பிரதிபலிக்கிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி