வளரும் அணிகளுக்கான மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா-ஏ சாம்பியன்

மோங் காக்: வளரும் அணிகளுக்கான மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பைனலில் வங்கதேசம்-ஏ அணியை 31 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா- ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஹாங்காங்கில் உள்ள மோங் காக் நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) சார்பில், வளரும் அணிகளுக்கான மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ஐசிசியின் நிரந்தர உறுப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகியவை தங்கள் ஏ அணிகளையும், நேபாளம், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய நாடுகள் முதன்மை அணிகளையும் களமிறக்கின.

தலா 4 அணிகளை கொண்ட 2 பிரிவுகளில் நடந்த லீக் சுற்றின் முடிவில் முதல் இடங்களை பிடித்த இந்தியா, வங்கதேசம் அணிகள் பைனலுக்கு முன்னேறின. நேற்று நடந்த பைனலில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா-ஏ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்தது. விரிந்தா 36, கனிகா 30, யு சேட்ரி 22 ரன் விளாசினர். வங்கதேச தரப்பில் நகிதா, சுல்தானா தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம்-ஏ அணி 19.2 ஓவரில் 96 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக நகிதா 17, ஷோபனா 16 ரன் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் ஸ்ரேயங்கா 4, மன்னத் 3, கனிகா 2 விக்கெட் அள்ளினர். இந்தியா-ஏ அணி 31 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று கோப்பையை கைப்பற்றியது. பைனலின் சிறந்த வீராங்கனையாக வங்கதேசத்தின் கனிகா அவுஜா, தொடரின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்ரேயங்கா விருது பெற்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது