மகளிர் உரிமை திட்ட பயனாளிகளின் தரவுகள் குறித்து மாதம்தோறும் ஆய்வு செய்யப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும். இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதனை தொடர்ந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும், 4 சக்கர, கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்தும், அரையாண்டு அடிப்படையில் தொழில், மின்சார பயன்பாடுகள் பற்றிய தரவுகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!