சென்னை: கடந்த 2021ம் ஆண்டு பெண்களுக்கான இலவச விடியல் பயணத் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய 7,334 சாதாரண பேருந்துகளில் தினசரி 54 லட்சம் பெண்கள் வீதம் இதுவரை 490 கோடிக்கு மேல் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலமாக சராசரியாக மாதம் ஒன்றுக்கு பெண்கள் ரூ.888 சேமித்துள்ளனர் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மானிய கோாிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது.