பெண்கள் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.69 ஆயிரம் கோடி வங்கிக்கடன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: ‘பெண்கள் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 12 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 305 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 30 லட்சத்து 563 பயனாளிகளுக்கு ரூ.2,504.18 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பு, மகளிர் தயாரிப்பு பொருட்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று விற்பனை செய்யும் வகையில் ரூ.3.20 கோடி மதிப்பிலான 100 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.2,504 கோடி மதிப்பிலான வங்கி கடன் வழங்கும் விழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு திராவிட மாடல் ஆட்சியில் 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை விரைவில் வழங்கி இலக்கு எட்டப்படும்.தமிழகஅரசு கடும் நிதி நெருக்கடியிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திராவிட மாடல் அரசு தாராளமாக செலவிட்டு வருகின்றது. சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு ஆதரவாக உள்ளதோ அதேபோல மகளிர் சுய உதவிக்குழுவினரும் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

சுகாதாரம், கல்வி போன்ற திட்டங்களில் அரசுக்கு மகளிர் சுயஉதவிக்குழுவினர் உதவி செய்து வருவதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  பெண்கள் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கப்படுவதோடு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாவட்டந்தோறும் பூமாலை வணிக வளாகங்கள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இது தவிர, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரரிக்கும் பொருட்கள் எங்க்கள் வீட்டில் பயன்படுத்தப்படுகின்ற்ன. தமிழ்நாடு முதல்வரின் வீட்டிலும் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்கள்தான் பயன்படுத்தப்படுகின்றது. காரணம், நீங்க்கள் தயாரிக்கும் பொருட்கள் தரமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* விளையாட்டு துறையில் தமிழ்நாட்டுக்கு விருது
‘இந்தியாவிலேயே விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளதால் மும்பையில் விருது வழங்கப்படுகின்றது. அதற்கு முன்பாக தாய்மார்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!