பெண்கள் அவசர காலத்தில் தற்காத்துக்கொள்வது எப்படி?

*திசா மகளிர் போலீசார் விழிப்புணர்வு

திருப்பதி : பெண்கள் தற்காப்பு முன்னெச்சரிக்கை குறித்து திசா மகளிர் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆந்திர மாநிலத்தில் திஷா செயலி பதிவு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் திருப்பதியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று எஸ்பி பரமேஸ்வர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், மகளிர் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் திசா செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் திருப்பதி பத்மாவதி மகளிர் கல்லூரி அருகே திருப்பதி திசா மகளிர் காவல் துறையினர் பெண்களுக்கான திஷா செயலியின் பயன்கள், அவசர காலங்களில் தற்காப்புக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேற்று நடத்தினர்.

திஷா செயலி பதிவு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களிடம் பேசி அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தனர். ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் அருகில் உள்ள போலீசார் அல்லது மகளிர் போலீசாரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்கள் வழங்குபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவந்தால் தீர்வு காணப்படும் என்று கூறினார்கள். இதில் ஏரளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்