ஈரானில் பெண்களுக்கு மீண்டும் ஆடை கட்டுப்பாடு: போலீஸ் தீவிர ரோந்து

துபாய்: ஈரானின், குர்திஸ்தானை சேர்ந்த இளம் பெண் மாஹ்சா அமினி(22)கடந்த ஆண்டு டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க சென்றார்.அப்போது அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என கூறி ஆடை கட்டுப்பாடு போலீசார் கைது செய்தனர். மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார். அதை கண்டித்து மிக பெரிய போராட்டம் வெடித்தது. இதில் 500 பேர் கொல்லப்பட்டனர். 20,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் கண்காணிப்பை கைவிட்டதால் அமைதி திரும்பியது.

இந்நிலையில் ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வந்தது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ ஆடை கட்டுப்பாடு விதிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து செல்வார்கள்.இந்த விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்’’ என எச்சரித்தார்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு