மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம்..!!

சென்னை: மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை எனக் கூறியுள்ளார். நடிகை குஷ்புவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய குஷ்புவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை பெண்கள் எரித்தனர். மேலும், மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செய்யாறு, சேலம், திருவண்ணாமலையில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம்
மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுக்கு ஒருமுறை கட்சி மாறும் பெண்மணி குஷ்பு என்று கார்த்தி சிதம்பரம் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என கொச்சைப்படுத்தும் குஷ்புக்கு அடிப்படை பொருளாதாரம் தெரிந்திருக்க வேண்டும். வேருக்கு நீர் பாய்ச்சுவதுபோல் மகளிருக்கு நேரடியாக வழங்கும் மகளிர் உரிமை திட்டம் சிறந்த பொருளாதார உத்தி என்று அவர் கூறினார்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு