பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ராணிப்பேட்டை: பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில் புதிய கார் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், டாடா தொழில் நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கைக்காக நாங்களும் பெருமிதம் கொள்கிறோம்.  தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான நாளாக இன்றைய தினம் திகழ்கிறது. டாடா குழுமம் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

Related posts

LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் வெளியேற்றம்

கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலாளர் கைது