மகளிருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 181 என்ற அவசர தொலைப்பேசி எண்ணுக்கு 3 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஒரு லட்சம் பெண்களுக்கு பாதுகாப்பு, உரிய சிகிச்சைகள், மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக தங்க தங்குமிடங்கள் செயல்படுகின்றன என கனிமொழி, மதி, வாசுகி உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. அரசு அமைத்துள்ள மையங்கள், அவசர எண், தங்குமிடங்களை பெண்கள் எளிதில் பயன்படுத்த முடிகிறதா? என ஐகோர்ட் எழுப்பியுள்ளது. மனுதாரர்கள் நேரில் ஆய்வு செய்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது!

ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை