வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் கீவளூர் கிராமம் தண்டு மாரியம்மன் கோயில் தெருவில் போலீசார் கண்காணித்தனர்.

அப்போது, அந்த தெருவை சேர்ந்த பூசனம் (40) என்ற பெண் தனது வீட்டில் பதுக்கி வடமாநில இளைஞர்கள் மற்றும் அப்பகுதி சேர்ந்த இளைஞர்களுக்கு மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த வீட்டில் சோதனை செய்தபோது 175 பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மதுபாட்டில்கள் விற்ற பூசனத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு