பாதாள சாக்கடைக்குள் விழுந்த பெண்: ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கை, காலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த சிலர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டனர்.

பெண் பாதாள சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் உதவி செயற்பொறியாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

டெல்லி, ஷீரடி, ஐதராபாத் செல்லும் 12 விமானங்கள் திடீர் ரத்து

சிறிய வகை கட்டிடங்களுக்கான பணி நிறைவுச்சான்று பெறுவதில் இருந்து விலக்கு: அரசாணை வெளியீடு

காசா மருத்துவமனை இயக்குனர் 7 மாதங்களுக்கு பின் விடுதலை: இஸ்ரேல் ராணுவம் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு