பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது

பழநி: பழநி அருகே காலை உணவு திட்ட பெண் பொறுப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜ மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஒரு கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்ட பொறுப்பாளராக 45 வயதுடைய பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்.8ம் தேதி பணியில் இருந்தபோது ஊராட்சி தலைவரின் கணவரும், பாஜ மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் (55) என்பவர் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்வதாக கூறி சென்றுள்ளார்.

அப்போது மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உணவுக்கூட கதவை சாத்திய மகுடீஸ்வரன், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மகுடீஸ்வரன் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில், மகுடீஸ்வரன் மீது கொலை மிரட்டல், பெண்களை துன்புறுத்துதல், மானபங்க நோக்கத்தில் உணர்வுகளை தூண்டுதல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று பொள்ளாச்சியில் டூவீலரில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மகுடீஸ்வரனை, போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார், பழநி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி