நீதிமன்றத்தில் எதிராக சாட்சியம் அளித்ததால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விருகை ரவியின் கார் டிரைவரை வெட்டி கொல்ல முயற்சி: கே.கே. நகர் ரவுடி கைது

சென்னை: வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விருகை ரவியின் கார் டிரைவரை வீடு புகுந்து வெட்டி கொல்ல முயன்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை கேகே நகர் 15வது செட்டர் 95வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் அரவிந்த் (27). இவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விருகை ரவியின் கார் டிரைவர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, திடீரென ஒருவர் கையும் அரிவாளுடன் உள்ளே புகுந்து ரமேஷை சரமாரியாக வெட்ட பாய்ந்தார். ஆனால் சாதுரியமாக ரமேஷ் அவரிடம் இருந்து தப்பினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர் ரமேஷ் உடனே வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று பார்த்தபோது, அதேபகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சந்துரு (எ) ஜாக்கோ (23) என தெரியவந்தது. உடனே சந்துருவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்