நிழற்குடை இன்றி மாணவர்கள் தவிப்பு

புழல்: செங்குன்றம், பாடியநல்லூர் மற்றும் சோழவரம் உள்ளிட்ட பல பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்குன்றம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பக்கங்களிலும் மற்றும் பொன்னேரி செல்லும் திசையில் மொண்டியம்மன் நகர் பேருந்து நிறுத்தம், பாடியநல்லூர் பேருந்து நிறுத்தம், சோழவரம் பஜார் பேருந்து நிறுத்தம், காரனோடை பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை இல்லை. இதன் காரணமாக, மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்து ஏற வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக, பாடியநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் சென்னை -கொல்கத்தா நெடுஞ்சாலை தடுப்பு கம்பி மேல் மாணவர்கள் ஆபத்தை உணராமல் அமர்ந்து கொண்டு, பேருந்து வந்த பிறகு ஓடிச்சென்று பயணிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட செங்குன்றம் பேரூராட்சி, பாடியநல்லூர், சோழவரம், காரனோடை ஆகிய ஊராட்சிகளைச் சார்ந்த நிர்வாகத்தினர் பேருந்து நிழற்குடை அமைத்து பயணிகள் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இடியுடன் கொட்டிய கனமழை

பாலித்தீன் குப்பைகளால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை