அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்: தாசில்தார் நடவடிக்கை

ஆலந்தூர்: பரங்கிமலை பட்ரோடு மங்காளி அம்மன் கோயில் தெரு சந்து பாதையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் அனுமதியின்றி, போக்குவரத்திற்கு இடையூறாக, பிள்ளையார் சிலை வைத்துள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் பரங்கிமலை போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக, ஆய்வாளர் செல்லப்பா, பல்லாவரம் தாசில்தாருக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில், தாசில்தார் ஆறுமுகம், பாங்கிமலை போலீஸ் உதவி கமிஷன் ஜீவானந்தம், ஆய்வாளர் செல்லப்பா கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர், நேற்று சம்பவ இடத்திற்கு வந்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்றினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு