கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் நிலையில் கணவருடன் இருந்த இளம்பெண் மீது தாக்குதல்: போலீஸ், மீடியாக்களுடன் சென்று மடக்கிய மனைவி

திருமலை: கருத்து வேறுபாடால் பிரிந்திருக்கும் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை அறிந்த அவரது மனைவி, அங்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நட்சத்திரா (29).

இவர் கடந்த 2012ம் ஆண்டு மிஸ் விசாகப்பட்டினமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த திரிபுரானே சாய்வெங்கடதேஜா (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.இதற்கிடையில் தனது கணவர், வேறொரு பெண்ணுடன் வசிப்பதை அறிந்த நட்சத்திரா அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார். அதன்படி நட்சத்திரா நேற்று போலீசார் மற்றும் ஊடகத்தினரை அழைத்துக்கொண்டு சாய்வெங்கடதேஜா தங்கியிருக்கும் வீட்டிற்கு அதிரடியாக சென்றார்.

அங்கு தேஜாவும், வேறு ஒரு இளம்பெண்ணும் ஒன்றாக இருந்ததை கையும் களவுமாக பிடித்தார். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நட்சத்திரா, தேஜாவுடன் இருந்த பெண்ணை சரமாரி தாக்கினார். இதை பார்த்த தேஜா, நட்சத்திராவை தாக்கி வீட்டில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து போலீசார், நட்சத்திரா, சாய்வெங்கடதேஜா, மற்றும் அவருடன் இருந்த பெண் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். அப்போது சாய்வெங்கடதேஜா கூறுகையில், இந்த பெண் சினிமாவில் நடிப்பது தொடர்பாக வந்தார்.

எங்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நட்சத்திரா என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது எனகூறினார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை