3வது டி20யில் ஜிம்பாப்வேவுடன் வெற்றி; அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடி தொடரை கைப்பற்றுவோம்: முதன்முறையாக ஆட்டநாயகன் விருதுபெற்ற வாஷிங்டன் நம்பிக்கை

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடை யிலான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. கேப்டன் சுப்மன் கில் 66 ரன், ஜெய்ஸ்வால் 36 ரன்க, ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் 3 விக்கெட்களை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமத் மற்றும் ஆவேஷ் கான் பவர் பிளே ஓவர்களிலேயே சாய்த்தனர். அதன் பின் மிடில் ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் அந்த அணியின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வெற்றி குறித்து கேப்டன் கில் கூறுகையில், “இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த போட்டி எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு முக்கியமாக இருந்தது. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே நல்ல தொடக்கத்தை கொடுத்தோம். ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் நிலையற்ற தன்மையில் இருந்தது. கணிக்க முடியாத படி இருந்தது. சில பந்துகள் நன்றாக எகிறி வந்தது. எனவே லென்த் பாலை அடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது.

இதுதான் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்களிடம் நான் கூறி விவாதித்தேன். இந்த ஆடுகளத்தில் புதிய பந்து தான் நன்றாக செயல்படும் என்பதை கணித்தோம். எங்கள் அணியில் அனைவரும் வெற்றிக்கு பங்காற்றுகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி’’ என்றார். 4 ஓவர்கள் வீசி 15 ரன் கொ டுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதுபெற்ற வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் “நான் நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் சிறப்பாக உணர்கிறேன். இது மிகவும் நல்ல உணர்வாக இருக்கிறது. கடந்த இரண்டு போட்டியை விட இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஜிம்பாப்வே வீரர்களின் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இருப்பினும் எங்களுடைய திட்டங்களை சரியாக செய்து நாங்கள் வென்றோம். வரும் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுவோம்’’ என்றார். வாஷிங்டன் சுந்தர் இதுவரை 4 டெஸ்ட் , 19 ஒரு நாள் மற்றும் 45 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். 2017 டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 7 ஆண்டுகளாக 68 சர்வதேச போட்டிகளில் ஆடிய அவர் முதன்முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது