குளிர்காலம் வந்தாச்சு

குளிர்காலம் வந்துவிட்டாலே வறண்ட சருமம், முகச்சுருக்கங்கள் என படையெடுக்கும். இதோ தடுக்க சில டிப்ஸ்கள்

1. முட்டையின் வெள்ளைக்கருவுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட்டாக்கி சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ சரும வறட்சி நீங்கி, சுருக்கங்கள் நீங்கும்.
2. தக்காளியை நைசாக அரைத்து பேஸ்ட்டாக்கி, வாயின் ஓரங்களில் மசாஜ் செய்து மீதியை முகத்தில் பேக் போட்டுக் கொண்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ சரும சுருக்கங்கள் நீங்கும்.
3. ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு ஒரு ஸ்பூன் சூடான நீர் சேர்த்துக் கலந்து சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவினால் சுருக்கங்கள் நீங்கும்.
4. பால் பவுடர், தேன் சேர்த்து கலந்து சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவலாம்.
5. பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் பேக் போட்டு வர நாளடைவில் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
6. வாழைப்பழம் தேன் சேர்த்துக் கலந்து பேக் போட்டு வர வறட்சி நீங்கி, சுருக்கங்கள் குறைந்து புத்துணர்வான சருமம் கிடைக்கும்.
– எம். வசந்தா

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை