விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: முதல் சுற்றில் ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் வெற்றி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம்தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த முதல் சுற்றுபோட்டியில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகாஸ்வியாடெக், அமெரிக்காவின் சோபியா கெனினுடன் மோதினார். இதில் 6-3,6-4 என்ற செட் கணக்கில், ஸ்வியாடெக் வெற்றிபெற்றார். துனிசியாவின் ஓனஸ் ஜபீர் 6-3,6-1 என ஜப்பானின் மோயுகாவையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 6-2,6-0 என அமெரிக்காவின் அலிசியாவையும், செக்குடியரசின் கேட்டரினா சினியாகோவா, 6-4,6-2 என கனடாவின் மெரினா ஸ்டாகுசிக்கையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

குரோஷியாவின் பெட்ரா மார்டிக், கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா, கனடாவின் லேலா அன்னி பெர்னாண்டஸ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில், கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்,7-6,6-4,7-5 என ஜப்பானின் டாரோ டேனியலையும், 2ம் நிலை வீரரான ஜோகோவிச், 6-1,6-2,6-2, என செக்குடியரசின் விட் கோப்ரிவாவையும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 6-2,6-4,6-2 என ஸ்பெயினின் ராபர்டோ கார்பலேஸ் பேனாவையும் வென்று 2வதுசுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது