விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, பிரேசில் வீராங்கனை ஹடாட் மாயா தகுதி பெற்றார். முதல் சுற்றில் போலந்தின் மேக்தலினா பிரெக் (26 வயது, 58வது ரேங்க்) உடன் நேற்று மோதிய மாயா (28 வயது, 20வது ரேங்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 50 நிமிடத்துக்கு நீடித்தது.2வது சுற்றில் ருமேனியாவின் அன்கா டொடோனியை (19 வயது, 142வது ரேங்க்) எதிர்கொண்ட அமெரிக்க நட்சத்திரம் கோகோ காஃப் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியபோ (26 வயது, 29வது ரேங்க்) 7-6 (7-5), 6-1, 6-3 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை 2 மணி நேரத்தில் வீழ்த்தினார்.
* ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் – துசான் லஜோவிச் (செர்பியா) இணை 2-6, 2-6 என நேர் செட்களில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ் – ஜாமி முனார் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.
* ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இருந்து விலகிய இங்கிலாந்து நட்சத்திரம் ஆண்டி மர்ரே, கலப்பு இரட்டையர் பிரிவில் சக பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானுவுடன் இணைந்து களமிறங்க உள்ளார்.
* விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா பவுசாஸ் மனீரோவுடன் மோதிய நடப்பு சாம்பியன் மார்கெடா வோண்ட்ருசோவா (செக்.) 4-6, 2-6 என நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கடந்த 30 ஆண்டுகளில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

Related posts

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

அரக்கோணம் வேளாண் இணை இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை..!!

திருச்செந்தூரில் திருநங்கையருக்கு இல்ல பால் ஊற்றும் விழா