காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பெண் தொழிலாளி பலி

காரமடை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வெள்ளியங்காடு சுண்டக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (60). இவர், அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். காட்டுப்பன்றி மற்றும் மான் தொல்லையை கட்டுப்படுத்த தனது நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் ேநற்று காலை அந்த வழியாக சென்ற தோலம்பாளையம் புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி கிரிஜா (55) என்பவர் அந்த மின்வேலியில் சிக்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வனத்துறை மற்றும் மின்வாரியத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல் நாகராஜ் மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.

Related posts

முக்கிய சந்திப்பு

கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுக்கு எடப்பாடி கோரிக்கை