ஆவடி அருகே கழுத்தை நெரித்து ராணுவ வீரரை கொன்று நாடகமாடிய மனைவி: இரண்டு மாதங்களுக்கு பிறகு கைது

ஆவடி: ஆவடி அருகே ராணுவ வீரரை கொலை செய்து நாடகமாடிய மனைவியை இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). இந்திய ராணுவ படையில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த மே 10ம் தேதி இரவு, அதீத மது போதையில் படுக்கை அறையில் சுய நினைவின்றி படுத்துக் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, லீமா ரோஸ் மேரி (36), அவரை மீட்டு, ஆவடி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவ பரிசோதனையில், வேளாங்கண்ணி தாஸ் இறந்தது தெரியவந்தது. ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், வேளாங்கண்ணி தாஸ் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், போலீசார் அவரது மனைவி லீமா ரோஸ் மேரியை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், என் கணவர் தினமும் மது போதையில் என்னிடம் தகராறு செய்வார். என் பெற்றோரையும் அவதூறாக பேசுவார். இதனால், ஆத்திரமடைந்த நான் சம்பவத்தன்று, மது போதையில் படுத்திருந்த கணவரை, புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், லீமா ரோஸை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்