மனைவியை விவாகரத்து செய்யாமல் பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது லிவ்-இன் ரிலேஷன்ஷிப் ஆகாது: பஞ்சாப் உயர் நீதிமன்றம் கருத்து

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழும் திருமணமான ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி குல்தீப் திவாரி விசாரித்தார். விசாரணை முடிவில் அவர்களது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மனைவியை விவாகரத்து செய்யாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் ஆண்களை லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் அல்லது திருமண உறவு முறையில் இருக்கிறார்கள் என்று அழைக்க முடியாது. முந்தைய மனைவியிடமிருந்து சரியான விவாகரத்து ஆணையைப் பெறாமல் இன்னொரு பெண்ணுடன் அவர் சேர்ந்து வாழ்வது என்பது காம வாழ்க்கை ஆகும். இது ஐபிசியின் 494/495 பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கலாம். ஏனெனில் அத்தகைய உறவு லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்ற சொற்றொடருக்குள் வராது. எனவே மனுதாரர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி