தென் மேற்கு பருவ மழை தீவிரம்.. தமிழ்நாட்டில் இரவில் பரவலாக கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவில் பரவலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, விழுப்புரம், கரூர் உள்பட தமிழ்நாட்டில் பரவலாக இரவில் கனமழை பெய்தது. ஒசூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இரவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. குளித்தலை, தண்ணீர்பள்ளி, மருதூர், பணிக்கம்பட்டி, அய்யர்மலை, லாலாபேட்டையில் கனமழை பெய்தது.

முசிறி, தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட இடங்களில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விழுப்புரம், காணை, கோலியனூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கனமழை பெய்ததால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை நங்கநல்லூர், பள்ளிக்கரணை, கோடம்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தில் கனமழை பெய்தது. கள்ளக்குறிச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடித்துள்ள்ளனர்.

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், கச்சிராயப்பாளையம், சங்கராபுரம், ஆலத்தூரில் கனமழை பெய்தது. வேலூர் நகரில் இரவில் இடி மின்னலுடன் அரைமணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. வேலூர் சத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், காகிதப்பேட்டை, காட்பாடியில் கனமழை பெய்தது.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்