உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதை முழுமனதுடன் வரவேற்கிறேன்: செல்வபெருந்தகை பேட்டி

பெரம்பூர்: வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், செயல்வீரர்கள் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துகொண்டார். இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது; வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது பாஜக சுதந்திரத்தை அவர்கள்தான் வாங்கினார்கள் என்பது போல ஒரு தோற்றத்தை கொண்டு வருகிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரஸ் பேரியக்கமும் பொதுமக்களின் தியாகமும் கலந்துள்ளது.

நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வட்டங்கள் மற்றும் மாவட்டம் தோறும் தேசியக்கொடி ஏந்திய காங்கிரஸ் தொண்டர்கள் சுதந்திர போராட்டத்தில் காங்கிரசில் பங்கு என்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி சொல்வார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது புலன் விசாரணை நடைபெற்று வருவதால் அதைப்பற்றி பேசவிரும்பவில்லை. ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவர்களது தொண்டர்கள் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் கேட்டுக் கொள்கிறோம். நாட்டில் யார், யாரோ முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது. காங்கிரஸ் பேரியக்கம் அதை முழு மனதோடு வரவேற்கிறது. இவ்வாறு கூறினார்.

 

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்