கோதுமை ரவா பொங்கல்

தேவையானவை:

கோதுமை ரவை 1 கப்,
பாசிப்பருப்பு ¼ கப்,
மிளகு,
சீரகம் தலா ½ டீஸ்பூன்,
நெய் 5 டீஸ்பூன்,
முந்திரி 10,
உப்பு,
கறிவேப்பிலை தேவைக்கு.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் நீர் ஊற்றி கோதுமை ரவையை வேகவைக்கவும். ரவை முக்கால் பதம் வெந்ததும், ஊறவைத்த பாசிபருப்பைச் சேர்த்து நன்கு வேக விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சூப்பரான கோதுமை ரவா பொங்கல் தயார்.

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்