சில்லி பாயின்ட்…

* வெஸ்ட் இண்டீசுடன் நடந்த 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 75 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டிரினிடாட், லாரா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன் குவித்தது. சால்ட் 119 ரன் (57 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்), பட்லர் 55, ஜாக்ஸ் 24, லிவிங்ஸ்டன் 54* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 15.3 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (ரஸ்ஸல் 51, பூரன் 39, ரூதர்போர்டு 36). இங்கிலாந்து பந்துவீச்சில் டாப்லி 3, சாம், ரெஹான் அகமது தலா 2, மொயீன், வோக்ஸ், அடில் ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சால்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 2-2 என சமநிலை வகிக்க, 5வது போட்டி நாளை நடக்கிறது.

* டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் சூரியகுமார் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். பந்துவீச்சு தரவரிசையில் இங்கிலாந்து சுழல் அடில் ரஷித் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி உள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் ஷுப்மன் கில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை