மேற்குவங்க மாநிலத்தில் எறும்பு கடி போன்ற சம்பவத்தை கூட சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்கிறது: மம்தா பானர்ஜி கிண்டல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எறும்பு கடி போன்ற சம்பவத்தை கூட சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்கிறது என்று ஒன்றிய பாஜக அரசை மம்தா பானர்ஜி கிண்டலடித்து பேசினார். மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள துர்கா பூஜை விழாவை முன்னிட்டு, அதன் அமைப்பாளர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார். ஆனால் அவர் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். எந்தக் காரணமும் இல்லாமல் எங்களது கட்சியினர் குறிவைக்கப்படுகின்றனர். அவர்களிடம் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துகின்றன.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எறும்பு கடித்தது போன்ற சிறிய சம்பவங்கள் நடந்தால் கூட அமலாக்கத்துறை, சிபிஐ விசாரிக்கிறது. ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர் இறந்த சம்பவத்தில் இருந்து உரிய பாடம் கற்றுக் கொண்டோம். ராகிங்கை தடுக்க ஹெல்ப்லைன் ஒன்றைத் தொடங்க உள்ளோம்’ என்றார். முன்னதாக நேற்று முன்தினம் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடத்திய நிலையில், மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்