மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறை துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

சோப்ரா: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மோதலில் ஒருவர் பலியானார். 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் ஜூலை 8 ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலையொட்டி திரிணாமூல் காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரம் நடந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தொண்டர்களுக்கு இடையே பல இடங்களில் மோதல் நடந்தது. தேர்தலில் மனுதாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில், வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் உள்ள வட்டார அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு சென்றவர்கள் மீது சிலர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், ஒருவர் பலியானார். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலிம் கூறுகையில்,‘‘ சோப்ரா வட்டார அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில்,படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்’’ என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!