மேற்குவங்கத்தில் இன்று அதிகாலை 2 சரக்கு ரயில்கள் மோதல்: 12 பெட்டிகள் கவிழ்ந்தன; டிரைவர் காயம்

கொல்கத்தா: பங்குராவில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில், ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. ஒரு சரக்கு ரயிலின் லோகோ பைலட் காயமடைந்தார். மேற்குவங்க மாநிலம் ஓண்டா ரயில் நிலையம் அருகே பங்குராவில் இன்று அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயிலின் மீது மோதியது. இதனால் இரண்டு ரயில்களின் சரக்கு பெட்டிகளும் தடம் புரண்டன.

பின்னால் சென்ற சரக்கு ரயிலின் லோகோ பைலட் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரு சரக்கு ரயில்கள் மோதிய விபத்தில், சுமார் 12 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மீட்பு பணிகள் நிறைவு பெறும் வரையில் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்