மேற்கு வங்க உதயமான நாள் கொண்டாட்டம்: மாநில ஆளுநருக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம் உதயமான நாள் என்று எதுவும் இல்லை என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி, அதனை கொண்டாட கூடாது என்றும் ஆளுநருக்கு கடிதம் எழுத்தியுள்ளார். மேற்குவங்கம் உதயமான நாள் ஆக இன்று கொண்டாடுவதற்கு அம்மாநில ஆளுநர் மாளிகையில் இன்று ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளர்.

அதில், மேற்குவங்கம் உதயமான நாள் என்று கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். radcliffe ஒப்பந்ததின் அடிபடையில் இந்திய தன்னட்சி அந்தஸ்து பெற்றபோது மேற்குவங்கம் உருவானதாக மம்தா கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மேற்கு வங்கம் நாள் எதுவும் தனியாக கொண்டாடியது இல்லை என்று மம்தா பானர்ஜி சுட்டுகாட்டுயுள்ளார். எனவே மேற்குவங்கம் உதயமான நாளாக ஆளுநர் மாளிகையில் கொண்டாடுவது தேவையற்ற குழப்பத்தையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும் என மம்தா தெரிவித்துள்ளர்.

மாநில அரசின் முன் அனுமதியின்றி இதுபோன்ற நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பது ஒட்டுமொத்த மாநில மக்களை அவமதிக்கும் செயல் என்று மம்தா சாடியுள்ளார்

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?