வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தம்மம்பட்டி, கொடுமுடி, சேலம் ஆகிய இடங்களில் 90மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

சென்னை, கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இதன் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 7ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்