ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகள்: எம்எல்ஏ அடிக்கல்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சியில் உள்ள மேல் சிலாவட்டம் கிராமத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.9.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, நியாயவிலை கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், கவுன்சிலர் யோகசுந்தரி மாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி பாலு அனைவரையும் வரவேற்றார்.

மரகதம் குமரவேல் எம்எல்ஏ புதிய நியாயவிலைக் கடை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிலாவட்டம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜ் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஊராட்சி செயலர் ராஜசேகர் நன்றி கூறினார். முன்னதாக மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள தேவதர் ஊராட்சியில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை, சாலையூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் புளிக்கொரடு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது