கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை கொளத்தூரில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, உதவுதல் நம் முதல் கடமை என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொண்ட இஸ்லாமியப் பெருமக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு