அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

ஆகஸ்ட் 31-ம் தேதி புலம் பெயர் தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செப்.2-ம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து முதல்வர் பேசுகிறார். செப். 7-ம் தேதி அமெரிக்காவில் உள்ள அயலக தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்

Related posts

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது