வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை), செப்.15ம் தேது (ஞாயிற்று மற்றும் முகூர்த்தம்) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 955 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ரூ.132 கோடி பணம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை

ரேஸ் கிளப் குத்தகை ரத்தானதை எதிர்த்து கிளப் சார்பில் உரிமையியல் வழக்கு: அரசு பதில் தர உத்தரவு

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க நியாயமான காரணங்கள் இருந்தால் எடப்பாடிக்கு விலக்கு அளிக்கலாம்: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு