வார விடுமுறையை கொண்டாட ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு: வார விடுமுறையை கொண்டாட, ஏற்காடு, பூலாம்பட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையான இன்று, விடுமுறையை கொண்டாட ஏற்காட்டில் ஏராளமானோர் குவிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அவர்கள், அங்குள்ள ஏரியில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குளுமையான சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதேபோல், இடைப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள், அங்குள்ள கடைகளில் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர். தொடர்ந்து அவர்கள் விசை படகில் சவாரி செய்து, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். காவிரி கரையோரத்தில் உள்ள நந்தி கைலாசநாதர் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், மூலப்பாரை பெருமாள் கோயில், கதவனை பாலம், திரைப்படங்கள் மற்றும் சீரியல் எடுத்த வயல் பகுதிகளில் சென்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்