அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: அமாவாசை, வார இறுதியையொட்டி ஜூலை 5 முதல் 7 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து ஜூலை 5ல் தி.மலை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 415 பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து ஜூலை 6ல் 310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருவுக்கு ஜூலை 5, 6ல் தலா 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், கோவையில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது