விராலிமலை: புதுக்கோட்டை அருகே திருமண விழாவிற்காக வைக்கப்பட்டுள்ள மீம்ஸ்களால் ஆன பேனர் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் மதி. பொறியியல் பட்டதாரி. இவருக்கும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஷாலினி என்பவருக்கும் சுக்காம்பட்டியில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காக அவரது நண்பர்கள் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர்.
அந்த பேனர் மீம்ஸ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மீம்ஸ்களில் மாப்பிள்ளை பெண் பார்க்க செல்வது முதல் திருமணம் முடிந்த பின் நடைபெறும் நிகழ்வுகள் வரை சமூக வலைதளங்களில் வெளியான மீம்ஸ்களை ஒவ்வொன்றாய் வரிசைப்படுத்தி மீம்ஸ் படங்களுடன் அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாச பிளக்ஸ் பேனர் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.